Friday, March 30, 2012

கிராபிக்ஸ் வேலைகளை இலகுபடுத்து​ம் கூகுள் குரோமின் புதிய பதிப்பு

இணைய உலாவிகளின் வரிசையில் முன்னணி வகிக்கும் கூகுள் குரோமின் புதிய பதிப்பை அதன் நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ளது.
18வது பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலாவியில் கிராபிக்ஸ் வேலைகளை இலகுபடுத்தும் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் இருபரிமாண கிராபிக்ஸ் வேலைகளை ஓன்லைனில் செய்யும் போது கணணியின் மத்திய முறைவழியாக்கல் அலகின்(CPU) தொழிற்பாடு அதிகமாக காணப்பட்டது.

ஆனால் புதிய பதிப்பில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் முப்பரிமாண கிராபிக்ஸ் வேலைகளையும் இலகுவாக செய்துகொள்ள முடியும். மேலும் பழைய கணணிகளிலும் விரைவாக செயற்படக்கூடியது.
தற்போதுள்ள கூகுள் குரோமை புதிய பதிப்பிற்கு மாற்றுவதற்கு அதன் விண்டோவின் வலது மூலையில் காணப்படும் குறடு(wrench) வடிவிலான ஐகனை அழுத்தி அதில் காணப்படும் About Google Chrome என்பதை தெரிவு செய்யவும். சில நொடிகளில் தானாகவே புதிய பதிப்பிற்கு அப்டேட் ஆகிவிடும்

No comments:

Post a Comment

My status