மின்னஞ்சல் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகப்பெரிய உதவியாய் இருப்பது ஜிமெயில் ஆகும்.
ஒவ்வொருவரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது அவரவர் விருப்பம் மற்றும் செயல்திறனைப் பொருத்ததாகும்.
பலர் பதிலே அனுப்பாமல் தனக்கு வரும் மின்னஞ்சல்களை மட்டும் படிப்பவராக இருக்கலாம். சிலர் ஒரு மின்னஞ்சலை பலருக்கு அனுப்பலாம். ஒரு சிலர் அனுப்பிய மின்னஞ்சலுக்கு மட்டும் தொடர்ந்து மாற்றி மாற்றி பதில் அனுப்பிய வண்ணம் சிலர் செயல்பட்டிருப்பார்கள்.
சில மின்னஞ்சல்கள் நேரடியாக நமக்கு வந்திருக்கும். சில கொப்பி ஆகவோ, சில மறைக்கப்பட்ட கொப்பியாகவோ கிடைத்திருக்கும். சிலவற்றை நாம் மிக முக்கியம் எனக் குறித்து வைத்திருப்போம். இந்த விபரங்களை எப்படி அறிவது? நிச்சயம் கஷ்டம் தான்.
ஆனால் இதற்கென மீட்டர் ஒன்றை கூகுள் வழங்குகிறது. இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.
Gmail Meter என அழைக்கப்படும் இந்த வசதி ஒரு Google Apps Script ஆகும். இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், நீங்கள் ஜிமெயில் வசதியை எப்படிக் கையாள்கிறீர்கள் என்ற புள்ளிவிபரத்தினை அறிந்து கொள்ளலாம்.
இந்த புள்ளி விபரங்கள் மூலம் நம்மைப் பற்றிய சில அரிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்வது கஷ்டமான காரியம் அல்ல. படிப்படியாகச் சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
முதலில் கூகுள் டாக்ஸ் திறந்து ஒரு புதிய ஸ்ப்ரெட் ஷீட் உருவாக்கவும். இதற்கு ஒரு பெயர் தரவும். பின்னர் இதில் Tools | Script Gallery சென்று ஸ்கிரிப்ட் கேலரியைப் பெறவும்.
இங்கு Gmail Meter என்பதைத் தேடிக் கண்டறியவும். அதன்பின் இன்ஸ்டால் பட்டனில் கிளிக் செய்திடவும்.
இன்ஸ்டலேஷன் போது, சில கேள்விகள் கேட்கப்படும். இதனைப் பயன்படுத்தும் உரிமை குறித்து தகவல்கள் கேட்டுப் பதியப்படும். இவற்றுக்கு அனுமதி அளித்த பின்னர், ஜிமெயில் மீட்டர் நிறுவப்படும்.
இந்த வசதி இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், Gmail Meter என்ற புதிய மெனு காட்டப்படும். இந்த மெனுவில் கிளிக் செய்து Get a Report என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Monthly Report மற்றும் Custom Report என இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும்.
No comments:
Post a Comment