Tuesday, June 19, 2012

கணணியில் வரவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் கணணியில் என்ன என்ன மாற்றங்கள் வரும் என்பதை கணித்து நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கணணியின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கணணிகள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
2. கணணிகள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கணணியின் கதவு திறக்கும்.

3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கணணியையும், மென்பொருள் அப்ளிகேஷனையும் இயக்கலாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.

4. கணணிகள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கணணிகள் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கணணி இனி டெஸ்க்கில் உள்ள டாப் கணணியாக இயங்கும்.
5. வீடுகளில் உள்ள கணணிகள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கணணியே பார்த்துக் கொள்ளும்.
6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.
7. இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும்.
இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்க வேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.
8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.
9. இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர்கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.
10. இன்டர்நெட் டிவி புழக்கம், கணணியுடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கணணி, புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் வர இருக்கின்றன.

No comments:

Post a Comment

My status