Samsung Galaxy வகை போன்களுக்கு Root செய்யாமலேயே தமிழ் எழுத்துருவை நிறுவ முடியும்.
முதலில் Fontomizer SP என்னும் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.hongik.fontomizerSP
இவ்வாறிருக்கும் பக்கத்தில் 'A' என்பதனுள் இருக்கும் ‘Akshar unicode' என்னும் எழுத்துருவை தரவிறக்கம் செய்யுங்கள்.
தரவிறக்கம் முடிந்ததும், Fontomizer -லிருந்து வெளியேறி, Settings - Display - Screen display - Font style இங்கு செல்லவும். அதனுள் சற்று முன் நீங்கள் தரவிறக்கிய Akshar எழுத்துரு இருக்கும். இந்த எழுத்துருவைத் தேர்வு செய்தால் போதுமானது. Samsung Galaxy அலைபேசியில் தமிழ் எழுதுக்களைப் படிக்க முடியும். ஆனால் இந்த எழுத்துருவில் தெளிவான தமிழ் இல்லை. ஓபரா உலாவியில் தமிழ் தளத்தைத் திறந்தால் எப்படி தமிழ் இருக்குமோ அவ்வாறு உள்ளது.
தமிழில் எழுத:
https://play.google.com/store/apps/details?id=com.KM.TK
No comments:
Post a Comment