Sunday, August 12, 2012

Tegra 3: சோனி அறிமுகப்படு​த்தும் நவீன டேப்லெட் கணனிகள்

ஏனைய முன்ணனி கணனி உற்பத்தி நிறுவனங்களுக்கு போட்டியாக நவீன வடிவமைப்பிலும், வினைத்திறன் வாய்ந்ததாகவும் உருவாக்கப்பட்ட தனது Tegra 3 டேப்லெட்களை விரைவில் சோனி நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது.
அன்ரோயிட் இயங்குதளததை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லெட்கள் மக்னீசியத்தினாலும், அலுமினியத்தினாலும் ஆன வெளி உடலமைப்பைக் கொண்டுள்ளன.
மேலும் இவற்றில் பயன்படுத்தப்படும் RAM கள் 16GB, 32GB, 64GB ஆகிய வெவ்வேறு அளவுகளைக் கொண்டதாக காணப்படுவதனால் ஏனைய டேப்லெட்களுடன் ஒப்பிடும் போது வினைத்திறன் அதிகமாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதியானது 16GB 399.99 அமெரிக்க டொலர்கள், 32GB 499.99 அமெரிக்க டொலர்கள் எனவும், 64GB டேப்லெட் ஆனது 599.99 அமெரிக்க டொலர்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

My status