Sunday, September 9, 2012

மோட்ரோலா அறிமுகப்படு​த்தும் RAZR M கைபேசிகள்

ஏனைய கைபேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு போட்டியாக வளர்ந்து வரும் மோட்ரோலா நிறுவனம் தனது புதிய வெளியீடான RAZR M ஸ்மார்ட் கைபேசிகள் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கூகுளின் அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இக்கைபேசியின் திரையானது 4.3 அங்குலமாகக் காணப்படுவதுடன் 540 x 960 ரெசொலூசனையும் கொண்டது.
தவிர 1.5GHz வேகம் கொண்ட dual-core புரோசசர், 1GB பிரதான நினைவகம், 2000mAh மின்கலம் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இக்கைபேசிகள் வையர்லெஸ் நெட்வேர்க் தொழில்நுட்பத்திலும் கிடைக்கக்கூடியதாகக் காணப்படும் எனவும், சில நாட்களின் பின்னர் அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்திலிருந்து அன்ரோயிட் 4.1 ஜெல்லிபீன் இயங்குதளத்திற்கு மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

My status