Tuesday, October 30, 2012

Nexus 4 கைப்பேசிகளை அறிமுகப்படு​த்துகின்றது Google

பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பில் உருவான Google Nexus 4 ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
Android OS மற்றும் Android 4.2 Jelly Bean ஆகிய இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பதிப்புக்களாக வெளிவரும் இக்கைப்பேசிகள் 4.7 அங்குலமுடைய தொடுதிரை வசதியினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுவதுடன் இதன் Resolutionஆனது 1280 x 768 Pixelsகளாக அமைந்துள்ளது.

மேலும் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடியதும் Qualcomm Snapdragon S4 தொழில்நுட்பத்தில் உருவானதுமான Processor-னைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 2GB RAM - இனையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் சேமிப்பு கொள்ளவு 8GB மற்றும் 16GB - இனைக்கொண்டு இரண்டு வகைகளைாக கிடைக்கின்றது.
இவை தவிர 8 Mexapixels உடைய பிரதான கமெரா பொருத்தப்பட்டுள்ளதுடன், வீடியோ அழைப்புக்களுக்காக 1.3 Mexapixelsஉடைய துணைக் கமெரா ஒன்றினையும் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

My status