Wednesday, November 21, 2012

விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு Service Pack வெளியிட போவதில்லை: மைக்ரோசாப்ட்

வழக்கமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கென Service Pack-யை மைக்ரோசாப்ட் வெளியிடும்.
 இவை புதிய வசதிகளை தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திவிடும்.

ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி Service Pack வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு Service Pack 1 வெளியிடப்பட்டது. இப்போது Service Pack 2 வெளியாக வேண்டிய நேரம் வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இனி வெளியிட போவதில்லை என அறிவித்துள்ளது.
இதற்கு காரணம், விண்டோஸ் 8 வெளியாகி விட்டதால் தன் வாடிக்கையாளர்கள் அதற்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.

கூடுதல் வசதிகளை தரும் வகையில் விண்டோஸ் 7க்கு Service Pack வெளியிடப்பட்டால் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிட, வாடிக்கையாளர்கள் தயங்குவார்கள் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.


Service Pack 2 விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இல்லை என அறிவித்தாலும், சின்ன சின்ன மேம்பாட்டிற்கான கோப்புகளை மைக்ரோசாப்ட் வழங்கலாம் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

My status