Sunday, March 31, 2013

இதுவரை இணைய உலகம் கண்டிராத மிகப் பெரும் சைபர்த் தாக்குதல்!


இணைய உலகமானது இதுவரை கண்டிராத பரந்தளவிலானதாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவதானிகள்தெரிவித்துள்ளனர்.
இது ‘biggest cyber attack in history’வரலாற்றில்இடம்பெற்றுள்ளமிகப் பெரிய சைபர்தாக்குதல் எனவர்ணிக்கப்படுகின்றது.

DDOS- Denial of Service attack எனப்படும் ஒரு கணினியோஅல்லது வலையமைப்போ அவை வழங்கும் சேவையைபயனாளிகள் பெறமுடியாத வகையில் முடக்கமேற்கொள்ளப்படும் சேவை மறுப்புத் தாக்குதலே தற்போதுமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது இணையத்தின்'DNS Domain Name System' என்று பரவலாக அறியப்படும் களப்பெயர் முறைமையை பாதிக்கத்தொடங்கியுள்ளதாகதொழில்நுட்ப வல்லுனர்கள் விளக்கமளிக்கின்றனர்.
இத்தகையவொரு பரந்தளவிலான தாக்குதலை இதுவரைஇணைய உலகம் கண்டதில்லை என ஆய்வாளர்கள் அச்சம்தெரிவித்துள்ளனர்.
இதனால் உலகலாளவிய ரீதியில் இணையத்தின் வேகம்நன்கு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான மோதலே இதற்கானகாரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தேவையற்ற மின்னஞ்சல்களை 'Spam' தடுக்கும்நிறுவனமான Spamhausக்கும் , அத்தகைய மின்னஞ்சல்களைஅனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் Cyberbunker க்கும்இடையேயே இடம்பெற்றுவரும் மோதலே தற்போதுபூதாகரமாக உருவாகியுள்ளது.
'Spamhaus' என்பது லண்டன் மற்றும் ஜெனீவாவைத்தளமாகக் கொண்ட தேவையற்ற மின்னஞ்சல்களைதடைசெய்யும் இலாப நோக்கற்ற நிறுவனமாகும். Cyberbunker என்பது ஹோஸ்டிங் (Hosting) நிறுவனமாகும்.
Spamhaus நிறுவனமானது போலியான பொருட்களுகளுக்குவிளம்பரம் வழங்குதல் போன்ற(உதாரணம் வயகரா,எடைக்குறைப்பு மாத்திரைகள்ஸ்பேம் மின்னஞ்சகளைஅனுப்புதல் போன்ற தீய நோக்கங்களுக்காகசெயற்படுத்தப்படும் சேர்வர்களை பட்டியலிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிறுவனமானது Cyberbunkerநிறுவனத்தினையும் அப்பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும்முகமாக Cyberbunkerநிறுவனம்மேற்கொண்ட நடவடிக்கை தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளதாகவும் அது தற்போது அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளதாகவும் இதுவே இணையத்தின்வேகம் குறையக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நிறுவனங்களுக்கிடையேயான மோதல் தற்போதுஇணைய உலகினையேஆட்டிப்படைக்கத்தொடங்கியுள்ளதாக அவதானிகள்சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது இவ்விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள்நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மில்லியன் கணக்கானோர் தற்போதுபாதிக்கப்பட்டுள்ளனர்மேலும் வங்கிகளின் இணையம்சார்ந்த செயற்பாடுகள்மின்னஞ்சல் சேவைவழங்குனர்களின் செயற்பாடுகள் விரைவில்பாதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு என்பது தொடர்பில்தொழிநுட்ப வல்லுனர்கள் திண்டாடி வருவதாகதெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

My status