Monday, June 3, 2013

மலிவு விலையில் மைக்ரோமெக்ஸ் 3D ஸ்மார்ட் போன்!

செம்சுங், அப்பிள், எச்.டி.சி. என மிகப் பெரிய நிறுவனங்கள் விலை கூடிய ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருகின்றன.
ஆனால் சில நிறுவனங்கள் அத்தகைய நிறுவனங்களின்  ஸ்மார்ட் போனுக்கு  இணையான சாதனங்களை தயாரித்து வருகின்றன. அதுவும் குறைந்த விலையில்.
அத்தகையதொரு நிறுவனமாக மைக்ரோமெக்சைக் குறிப்பிடலாம்.




குறிப்பாக மைக்ரோமெக்சின் கென்வஸ் வரிசை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்கள் வழங்கக்கூடிய வசதியை இவையும் வழங்குகின்றன. மேலும் இவற்றின் விலையும் ஒப்பீட்டளவில் குறைவாகும்.
மைக்ரோமெக்ஸ் நிறுவனமானது இவ் உத்தியைக் கையாண்டு சந்தையில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைக் கண்டுள்ளது.


அந்நிறுவனம் தற்போது குறைந்த விலையில் முப்பரிமாண ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.

இது Micromax A115 Canvas 3D என பெயரிடப்பட்டுள்ளது. முப்பரிமாண திரை மட்டுமன்றி 1 GHz டுவல் கோர் புரசசர், 512 எம்.பி. ரெம் மற்றும் 5 மெகாபிக்ஸல் கெமராவினையும் இது கொண்டுள்ளது.
இதுமட்டுமன்றி அண்ட்ரோய்ட் 4.1.2 ஜெலி பீன் மூலம் இது இயங்குவதுடன் டுவல் சிம் வசதியையும் கொண்டுள்ளது.
இச் ஸ்மார்ட் போனின் விலை இந்திய நாணயப்படி 10 ஆயிரம் ரூபாயாகும்.

No comments:

Post a Comment

My status