Monday, June 3, 2013

மீள முடியாமல் தவிக்கும் நொக்கியா!

ஸ்மார்ட் போன்களின் விற்பனை சந்தையில் சிறப்பாக உள்ளது.  இதனால்அப்பிள், செம்சுங் போன்ற நிறுவனங்களின் நிதி நிலைமை பிரகாசமாக உள்ளது.
அதேபோல் நொக்கியாவின் விண்டோஸ் லுமியா ஸ்மார்ட் போன்கள் சிறப்பாக விற்பனையாகின்ற போதிலும் நொக்கியாவின் நிதி நிலைமை என்னவோ இருட்டாகத்தான் உள்ளது.
Basic Models எனப்படும் ஆரம்ப நிலை, சற்று விலைகுறைந்த கையடக்கத்தொலைபேசிகளின் விற்பனை பெரிதாக கைகொடுக்காமையாலேயே நொக்கியாவால் பெரிதும் பிரகாசிக்க முடியாமல் போயுள்ளது.
http://www.virakesari.lk/image_article/nokia-lumia-900-review-screen.jpg
இவ்வருடத்தின் முதல்காலாண்டு அறிக்கையின் படி அப்பிள், மற்றும் செம்சுங் நிறுவனங்களை விட மிகவும் பின் தங்கிய நிலையிலேயே நொக்கியா உள்ளது.
நொக்கியா லுமியா ஸ்மார்ட் போன்கள் 5.6 மில்லியன் விற்பனையாகியுள்ளதுடன் இது கடந்த வருடத்தின் இதே காலாண்டுப் பகுதியை ஒப்பிடும் போது 27% அதிகரிப்பாகும்.
எனினும் இதனையும் மீறி நொக்கியாவின் நிலைமை குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைக் காட்டத் தொடங்கவில்லை.

இதேபோல் மொத்த தேறிய விற்பனை 5.9 பில்லியன் யூரோக்களாக உள்ளதுடன் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது  20 வீத வீழ்ச்சியாகும்.

அதேபோல் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது  போன்களின் எண்ணிக்கையும் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

இதனால் நொக்கியாவின் பங்கு விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. 
விண்டோஸுடன் நொக்கியா கைகோர்த்த பின்னர் அது தனது வீழ்ச்சியிலிருந்து மீளும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் நிலைமை தலை கீழாக மாறியுள்ளது.
அதன் நிறைவேற்று அதிகாரியான ஸ்டீபன் இலோப் நொக்கியா தனது வீழ்ச்சியிலிருந்து மீள இரண்டு வருடங்கள் தேவை என தான் பதவியேற்ற போது தெரிவித்திருந்தார்.
ஆனால் இரண்டு வருடக் காலப்பகுதி கடந்துள்ள போதிலும் நொக்கியாவால் வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியாமல் உள்ளது.

சந்தையில் போட்டித் தன்மை அதிகமாக உள்ளமை, மலிவு விலை அண்ட்ரோய்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றமை போன்றவையே நொக்கியாவின் தடுமாற்றத்துக்கான காரணமாகும்.
http://www.virakesari.lk/image_article/nokia-dadadalumia-800.jpg
நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருகின்றமை நொக்கியாவின் நிலமையை இன்னும் மோசமாக்கக்கூடிய சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன.
செம்சுங் கெலக்ஸி எஸ்4, ஐபோன் 5எஸ் என போட்டி அதிகமாக உள்ளதாக்ல் வீழ்ச்சியில் இருந்து எழுவது சற்று சந்தேகத்துக்குரியதே.

No comments:

Post a Comment

My status