Google நிறுவனம் Institute of Electrical and Electronic Engineers (IEEE) நிறுவனத்துடன் இணைந்து Little Box Challenge எனும் போட்டி ஒன்றினை நடாத்துகின்றது.
இதன்படி மின்கலங்களில் சேமிக்கப்பட்டுள்ள DC மின்னோட்டத்தினை AC மின்னோட்டமாக மாற்றக்கூடிய சிறிய அளவிலான இன்வெட்டர் ஒன்றினை உருவாக்க வேண்டும்.
இதன் வரையறையாக 450 வோல்ற் வரையான DC மின்னோட்டத்தை பயன்படுத்தி 240 வோல்ற், 2 kW வலுவுடைய மின்னை உற்பத்தி செய்ய வேண்டும். அத்துடன் வழங்கப்படும் மின்னோட்டத்திலிருந்து 95 சதவீதம் வருவிளைவு (Output) கிடைக்கப்பெற வேண்டும்.
இவற்றுடன் குறித்த உபகரணத்தின் வெப்பநிலை 60 டிகிரியை விட அதிகரிக்கக்கூடாது.
இவற்றுக்கு இணங்க இன்வெட்டரை தயாரிப்பவர்களுக்கு கூகுள் நிறுவனம் 1 மில்லியன் டொலரை பரிசாக வழங்கக் காத்திருக்கின்றது.
இப்போட்டியில் பங்குபற்ற விரும்புவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 30ம் திகதிக்கு முன்னர் தங்கள் பதிவுகளை மேற்கொண்டு 2015ம் ஆண்டு ஜுலை மாதம் 22ம் திகதி இன்வெட்டரை கையளிக்க தயாராக வேண்டும்.
அதன்பின்னர் சமர்ப்பிக்கப்படும் 18 இன்வெட்டர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 திகதி அமெரிக்காவில் 100 மணித்தியாலங்கள் வரை பரிசோதிக்கப்பட்டு 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
No comments:
Post a Comment