உலகிலேயே அதிக வேகமாக தரவுகள் பரிமாற்றக்கூடிய தொழில்நுட்பத்தினை Technical University of Denmark(DTU) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இதன்மூலம் முன்னர் ஜேர்மனியிலுள்ள Karlsruhe Institute of Technology ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட 32 Tbps என்ற தரவுப்பரிமாற்ற வேகம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வேகமானது 43 Tbps ஆக காணப்படுகின்றது.
முற்றுமுழுதாக ஒப்டிக்கல் மீடியாவினை ஊடகமாகக் கொண்ட இந்த அதிவேக தொழில்நுட்பமானது கடந்த மாதம் கலிபோர்னியாவில் இடம்பெற்ற Conference on Lasers and Electro-Optics(CLEO) நிகழ்வில் ஆராயப்பட்டு உலக சாதனையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment