1),கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்…
தைரிய பார்ட்டிகள் . நல்லவர் தான் ஆனால் கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே..
2),கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்…
ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவது போலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..
3),கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்…
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. டாக்டர் விக்ரம் சாராபாய்..
4),உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில் தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..
5),பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்…
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும் கூட . இந்த ஸ்டைலின் கீழ் மர்லின் மன்றோ, கபில்தேவ்..
6),பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்… புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..
7),முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்…
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் .
பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..
8),வெறுமனே பெயரை எழுதி வைத்தால்…
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா.
9),கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .