Friday, August 22, 2014

மெயில Signout பண்ண மறந்துட்டீங்களா? கவலைய விடுங்க

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் என்பது அத்தியாவசிய தேவையாகி விட்டது என்று சொல்லலாம்.
ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருவதால் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சில நேரங்களில் அவசர தேவைகளுக்காக பிறரது கணனி மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்துகிறோம்.
பிறகு அவசரத்தில் கணக்கை முழுவதும் முறைப்படி signout செய்யாமல் விட்டுவிடுவோம். இதனால் மற்றவர்கள் நமது கணக்கை எளிதாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
சிலரின் கணக்குகளில் 10,000க்கும் அதிகமான மெயில்கள் இருக்கும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஏனெனில் அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் விசிட் செய்பவராக இருக்கலாம். அவர் எத்தகைய முக்கியமான தகவல்களையும் அதனுள் வைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் தினமும் தங்கள் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு இது இந்த செயல் ஆபத்தான ஒன்றாக இருக்கும்.
முறைப்படி signout செய்யாமல் பிறகு "அய்யோ இப்படி மறந்து வந்துட்டேனே" என வேறு இடத்தில் இருந்து தூக்கம் தொலைப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
இப்படிபட்டவர்களுக்கு தான் gmail தனது சிறந்த சேவையை வழங்கியுள்ளது. எந்த இடத்தில் நீங்கள் உங்கள் கணக்கை முறைப்படி மூடா விட்டாலும், வீட்டில் இருந்தபடியே அந்த கணக்கை எளிதாக மூடி விடலாம்.
என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்கள் Gmail கணக்கை Login பண்ண வேண்டும்.
Gmail-ன் உள்ளே அதன் வலது பக்கம் Last Account Activity ன் கீழ் Details என்பதை கிளிக் செய்யவும்.
புதிதாக "activity on this account" என்ற விண்டோ திறக்கப்படும். அதில் எங்கு, எந்த நேரத்தில் உங்கள் Gmail கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது காட்டப்படும்.
"sign out all other sessions" சென்று அனைத்து தீர்வு காணலாம்.

No comments:

Post a Comment

My status