ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் முதன் முதலாக உருவாக்கிய ஆப்பிள் 1 கணணி 3,74,500 அமெரிக்க டொலருக்கு ஏலம் போயுள்ளது.
“இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு பொருந்தும்.
ஆப்பிள் நிறுவனத்திற்காக அவர் முதன் முதலாக உருவாக்கிய கணணி சமீபத்தில் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. அது 3,74,500 டொலருக்கு ஏலம் போனது.
ஆப்பிள் 1 என்ற அந்த கணணி 1976ஆம் ஆண்டு 666.66 டொலர் செலவில் தயாரிக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் தான் இதை உருவாக்கினார்.
1977ஆம் ஆண்டு ஆப்பிள் 2 கணணிகள் அறிமுகம் செய்யப்பட்ட உடன் ஆப்பிள் 1 விற்பனையை நிறுத்தி விட்டனர். ஆனால் 35 வருடங்களைத் தாண்டியும் அந்த கணணி பழுதில்லாமல் வேலை செய்கிறது.
No comments:
Post a Comment