பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிற்கு முதன் முறையாக பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Sheryl Sanberg என்ற பெண் கடந்த 2008ஆம் ஆண்டு கூகுளில் இருந்து விலகி, பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தார்.
தற்போது இவர் பேஸ்புக் இயக்குனர் குழுவில் ஒருவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க்கிற்கு அடுத்த படியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட உயர் அதிகாரியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.
பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் உயர் பதவிகளுக்கு பெண்களை தெரிவு செய்வதில்லை என சமீபகாலமாக குற்றச்சாட்டு இருந்த வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக Sheryl Sanberg தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புள்ளிவிபரத் தகவலின் படி, உலகின் பெரும் நிதி செல்வாக்குடைய முன்னணி 500 நிறுவனங்களின் நிர்வாக குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் கடந்தாண்டு 16.1 சதவிகிதம் பெண்களே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment