விடுமுறைகாலங்களில் நீண்ட தூரங்களாக சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்பவர்கள் அப்பயணத்தின் நினைவாக வீடியோ, புகைப்படங்களை எடுக்கத்தவறுவதில்லை.
தற்போது சுற்றுலாப் பயணங்களை பதிவு செய்யக்கூடிய அதி நவீன பதிகருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Roadtrip Video Recorder எனும் இப்பதிகருவியினை பயணிக்கும் வாகனங்களின் முற்பகுதியில் பொருத்திவிட்டால் போதும் அது தானாகவே முழுமையான பயணத்தினையும் பதிவுசெய்துவிடும்.
இக்கருவியானது 8x உருப்பெருக்கம், 120 டிகிரி கோணத்தை உள்ளடக்கக் கூடிய வில்லையினைக் கொண்டிருப்பதுடன் 270 டிகிரியில் காட்சிகளைப் பதிவு செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் 640 x 480 ரெசொலூசனில் காட்சிகளை பதிவுசெய்யும் திறனைக் கொண்டுள்ளது. அதேநேரம் வாகனத்தில் ஏற்படும் திருப்பங்களுக்கு ஏற்ப தனது நிலையினையும் மாற்றக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல பதிவு!!!எந்த டேப்லெட் வெர்ஸன் ஸ்கைபீ சப்போர்ட் செய்யும்????ரஷீத்
ReplyDelete