Sunday, June 17, 2012

பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப நிபுணர் பதவி விலகப் போவதாக அறிவிப்பு

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தலைமை தொழிநுட்ப நிபுணர் பிரெட் டெய்லர், இன்னும் சில நாட்களில் தான் பதவி விலகப் போவதாகவும் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் நாஸ்டாக் ஸ்டொக் மார்க்கட்டில் பேஸ்புக்கின் பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னர் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதாவது கடந்த மாதம் ஃபேஸ்புக்கின் பங்குகள் $38 டொலரிலிருந்து 21% வீதம் வீழ்ச்சியடைந்து $30 டொலருக்கு விற்பனையாகத் தொடங்கின.
Mr.டெய்லர் தனது பதவி விலகல் தொடர்பாக கூறுகையில், பேஸ்புக்கிலிருந்து விலகுவது தனக்கு கவலை அளிப்பதாக இருந்த போதும் புதிதாக நிறுவனம் ஆரம்பிப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது என்றார்.
மேலும் இந்த பதவி விலகல் மிக இலகுவான காரியமாகத் தனக்கு அமையவில்லை என்றும், பேஸ்புக்கின் தலைமைத்துவம் மற்றும் குழு மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.
இது தவிர பேஸ்புக்கில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளான பேஸ்புக் கமெரா, மற்றும் அப்பிள் நிறுவனத்திற்கான வசதிகள் என்பன குறித்து தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேஸ்புக்கின் ஸ்தாபகரான மார்க் சூக்கெர்பேர்க் டெய்லரின் பதவி விலகல் குறித்து கருத்துரைக்கையில், அவருடன் வேலை செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக இருந்தது எனவும், அவரும் அவரது குழுவினரும் பேஸ்புக்கிற்கு ஆற்றிய கடமை தொடர்பாக தனக்கு மிகுந்த விசுவாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

My status