பேஸ்புக் ஆரம்பித்து வெகு நாட்களுக்கு பிறகு கமென்ட் எடிட்டிங் வசதியை அறிமுகபடுதியுள்ளது. இதற்க்கு முன் பேஸ்புக்கில் ஏதேனும் எழுத்து பிழையுடன் ஏதேனும் கமென்ட் போட்டால் அதை மறுபடியும் மாற்ற முடியாது . அந்த கமெண்டை அழித்து புதியதாக தான் போட வேண்டும். இந்த பிரச்சினை இனி இல்லை.பேஸ்புக் வெளியிட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம் நீங்கள் எழுத்து பிழையுடன் கமென்ட் போட்டாலும் இனி அந்த கமெண்டை மறுபடியும் எடிட் செய்து எழுத்து பிழையை சரி செய்து கொள்ளலாம்.
கமென்ட் போட்டு முப்பது வினாடிகள் கழித்து எப்பொழுது வேண்டுமென்றாலும் உங்கள் கமெண்டை எடிட் செய்து கொள்ளலாம். நீங்கள் ஒரு கமெண்டை எடிட் செய்து விட்டால் அதனருகில் Edited என்ற ஒரு லிங்க் வரும் அதில் நீங்கள் தவறாக போட்ட கமென்ட் முதல் எத்தனை முறை எடிட் செய்திருந்தாலும் அனைத்தையும் அந்த லிங்கில் பார்த்து கொள்ளலாம். இதை நீங்கள் மட்டுமின்றி மற்றவர்களும் பார்க்க முடியும்.
இந்த புதிய வசதி பதிவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஏனெனெனில் பெரும்பாலானவர்கள் தற்பொழுது பேஸ்புக் கமென்ட் பெட்டியை அவர்களின் வலைப்பூக்களில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். அதில் கருத்து இடுபவர்கள் தவறாக இட்டாலும் மறுபடியும் மாற்றி கொள்ள ஏதுவாக இருக்கும்.
No comments:
Post a Comment