Friday, August 10, 2012

இலகுவாக எடுத்துச் செ​ல்லக்கூடிய கீபோர்ட் அறிமுகம்

கணனிகள், கைப்பேசிகள் என்பனவற்றிற்கு தரவுகளை உள்ளீடு செய்வதற்காக பயன்படுத்தப்படும் கீபோர்ட்கள் தற்போது புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளன.
அதாவது சட்டைப் பைகளிலேயே இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.
எனினும் தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவற்றிற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
QWERTY கீபோர்ட் வகையைச் சார்ந்ததாகக் காணப்படும் இவை சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய மின்கலங்கள் மூலம் இயங்குவதுடன், தொடர்ச்சியாக எட்டு மணித்தியாலங்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றின் அறிமுக விலை 240 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

My status