Friday, August 10, 2012

UEFI: சில புதிய தகவல்கள்

யூபை எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பச் சொல், புதியதாய் இனி கணனி இயக்கத்தில் இணைக்கப்பட இருக்கும் இடைமுகம் ஒன்றைக் குறிக்கிறது.

இதனை Unified Extensible Firmware Interface என விரித்துக் கூறலாம். தற்போது கணனியில் நீக்கமற இடம் பெற்றிருக்கும் BIOS(Basic Input Output System) interfaceக்குப் பதிலாக இது பயன்படுத்தப்பட இருக்கிறது.
நீங்கள் கணனியை ஸ்விட்ச் ஆன் செய்தவுடன், உங்கள் கணனியில் என்ன என்ன வன்பொருள் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று இந்த UEFI இடைமுகம் ஒரு ஸ்டாக் எடுக்கும்.
தன் சோதனையில் அறியப்படும் அனைத்து சாதனங்களும் நன்கு இயங்கும் தன்மையில் உள்ளனவா எனக் கண்டறியும்.
எல்லாம் சரியாக இருக்கிறது என அறிந்தவுடன் இயங்குதளத்தினை ஆன் செய்து பெர்சனல் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை அதனிடமும்(கூடவே உங்களிடமும்) கொடுத்துவிடும். இதைத்தானே பயாஸ்(BIOS)இப்போது செய்து வருகிறது.
UEFI பலவகை சிப் கட்டமைப்பினை சப்போர்ட் செய்கிறது.(இதில் 32 மற்றும் 64 பிட் ப்ராசசர்களும் அடக்கம்) விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் அமைய இருக்கும் ARM சிப்களும் இதில் அடக்கம்.
ஆனால், பயாஸ் இத்தனை வகை ப்ராசசர்களை சப்போர்ட் செய்திடாது. மேலும் இது 16 பிட் ப்ராசசர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும்.
புதிய UEFI இடைமுகம் பல வகைகளில் செயலாற்றுவதுடன், பழைய பயாஸ் செய்திடும் வேலைகளையும் செய்கிறது. எனவே, பயாஸ் உள்ள பழைய மதர்போர்டினை, புதிய இடைமுகத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

My status