Showing posts with label iphone 5. Show all posts
Showing posts with label iphone 5. Show all posts

Monday, May 12, 2014

வாட்ஸ்ஆப் மென்பொருளில் பேசும் வசதி அறிமுகம்; பேஸ்புக் அதிரடி அறிவிப்பு

மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாட்ஸ்ஆப்பின் அசுர வளர்ச்சியை கண்டு அதை பேஸ்புக் நிறுவனமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த சில மதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப்பில், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன. லைன், வைபர், டாங்கோ போன்ற மென்பொருள்களில் உள்ள பேசும் வசதி வாட்ஸ்ஆப்பில் இல்லை என்பது ஒரு குறையாவாக வாடிக்கையாளர் மத்தியில் நிலவியது. எனவே அந்த குறையை போக்கும் விதமாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.

Thursday, September 12, 2013

கேலக்ஸி நோட் 3 மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச்-ஐ வெளியிட்டது சாம்சங்! (படங்கள்)

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தொடங்கியுள்ள சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சியில் கேலக்ஸி நோட் 3 மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பெர்லினில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சி நடப்பது வழக்கம். இதன்படி, ஐஎப்ஏ – 2013 கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த கண்காட்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் – 3 செல்போனையும், கியர் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகம் செய்தது. இவை இரண்டிலும் பல்வேறு புதிய வசதிகளை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி நோட் – 3ல் பெரிய ஸ்கிரீன், எஸ் பென் வசதிகள் உள்ளன. இது தவிர ஒரே நேரத்தில் செயல்படக்கூடிய பல்வேறு வசதிகளும் உள்ளன என்று சாம்சங் தெரிவித்துள்ளது.
gty_galaxy_gear_watch_thg_130906_16x9_992

ib75oqb8XHVQ

My status