Showing posts with label technology in tamil. Show all posts
Showing posts with label technology in tamil. Show all posts

Thursday, October 16, 2014

அதிவேக Wi-Fi தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய தயாராகும் சம்சுங்

மொபைல் சாதன உற்பத்தில் கொடிகட்டிப் பறக்கும் சம்சுங் நிறுவனம் தனது சாதனங்களில் அதிவேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி 60 GHz அதிர்வெண்ணில் 4.6 Gbps வேகத்தில் தரவுகளைப் பரிமாற்றக்கூடியதாக இருக்கும் எனவும் 1GB கோப்பு அளவுடைய வீடியோ ஒன்றினை 3 செக்கன்களுக்குள் தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேகமானது தற்போது பயன்பாட்டிலுள்ள Wi-Fi தொழில்நுட்பத்தின் வேகமான 866 Mbps வேகத்திலும் 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் கைப்பேசிக்கு பிரதியீடாக பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் பிரேஸ்லெட்

தற்போது ஸ்மார்ட் பிரேஸ்லெட் எனப்படும் இலத்திரனியல் கைப்பட்டிகளை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
எனினும் இவை பொதுவாக உடல் ஆரோக்கியத்தை பேணுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதுடன் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு பிரதியீடாகவும் பயன்படுத்தக்கூடிய .klatz எனும் புதிய பிரேஸ்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.
LED திரையினைக் கொண்ட இந்த பிரேஸ்லெட்டின் மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு வரும் குறுஞ்செய்திகளை பார்வையிட முடிவதுடன், குரல்வழி அழைப்புக்களையும் கையாள முடியும்.

அதி வினைத்திறன் கொண்ட கமெராவினை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி

LG நிறுவனம் இரு மாதங்களுக்கு முன்னர் LG G3 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் LG G4 எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் மும்முரமாக அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
2015ம் ஆண்டளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசியில் 20.7 மெகாபிக்சல்களை உடைய அதி வினைத்திறன் கூடிய கமெரா இணைக்கப்படவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இதில் கமெரா அசைவதனூடாக படங்களில் ஏற்படும் குறைபாடுகளை தவிர்ப்பதற்காக மேம்படுத்தப்பட்டுள்ள OIS எனும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Wednesday, August 6, 2014

YouTube தளத்தில் நீங்கள் இதுவரை அறிந்திராத அருமையான சில வசதிகள்!




Y
ouTube தளம் பற்றி அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும்.
இணையத்தில் வீடியோ கோப்புக்களை சேமித்து அதனை பயனர்களின் பார்வைக்கு வழங்க எத்தனயோ தளங்கள் இருந்தாலும் அதில் YouTubeதளத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.
அந்த வகையில் Google ஆல் நிருவகிக்கப்படும் இந்த தளத்தில் ஏராளமான வசதிகளும் பல சுவாரஷ்யமான அம்சங்களும் கொட்டிக் கிடக்கின்றன ஆனால் அவற்றுள் அதிகமானவற்றை நாம் அறியத்தான் தவறி விடுகின்றோம்.
எனவே YouTube தளம் மூலம் அடைய முடிகின்ற சில வசதிகளை கீழே பார்ப்போம்.



நீங்கள் YouTube தளத்தில் இருக்கும் ஒரு வீடியோ கோப்பினை தரவிறக்க விரும்பினால் பின்வரும் முறையை பின்பற்றுக.

குறிப்பிட்ட வீடியோ கோப்பிற்கான URL இற்கு முன் இருக்கும் https://www. என்பதனை நீக்கி விட்டு ss என்பதனை தட்டச்சு செய்து Enter அலுத்துக

உதாரணத்திற்கு https://www.youtube.com/watch?v=Rxz9Rn98MDs எனும் இந்த இணைப்பின் https://www.என்பதனை நீக்கிவிட்டு ss என்பதனை சேர்த்தல் அது பின்வருமாறு அமையும்.
ssyoutube.com/watch?v=Rxz9Rn98MDs

இனி அது savefrom எனும் தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும் பிறகென்ன உங்களுக்குத் தேவையான வீடியோ கோப்பின் வடிவத்தை தெரிவு செய்து சுட்டுக. பிறகு குறிப்பிட்ட வீடியோ கோப்பு உங்கள் கணனிக்கு தரவிறக்கப்படும். (படத்தினை தெளிவாகக் காண படத்தின் மேல் சுட்டுக)


வீடியோ கோப்பொன்றினை அதன் தெரிவு செய்யப்பட்ட இடத்திலிருந்து பார்க்க

நீண்ட நேரம் இயங்கக் கூடிய ஒரு வீடியோ கோப்பினை நீங்கள் விரும்பும் இடத்திலிருந்து பார்க்க விரும்பினால் அதற்கான இணைப்பின் இறுதிப்பகுதியில் இயங்க ஆரம்பிக்க வேண்டிய நேரத்தினை சேர்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு 5 நிமிடம் இயங்கக் கூடிய ஒரு வீடியோ கோப்பினை அதன் 2 நிமிடம் 20 வினாடிகளுக்குப் பின் இயங்கக் கூடிய பகுதியை மாத்திரம் நீங்கள் பார்க்க விரும்பினால் குறிப்பிட்ட இணைப்புடன் #t=02m20s என சேர்க்க வேண்டும். (இங்கு m என்பது நிமிடத்தினையும் s என்பது வினாடியையும் குறிக்கும்)

உதவிக்கு பின்வரும் இணைப்பினை பார்க்க

https://www.youtube.com/watch?v=Rxz9Rn98MDs#t=03m22s

ஒரு வீடியோ கோப்பினை உச்ச தெளிவுத் திறனில் (HD) வடிவில் பார்க்க.

நீங்கள் YouTube தளத்தில் பார்க்கும் வீடியோகோப்புக்கு கீழ் தரப்பட்டிருக்கும்Settings Icon ஐ சுட்டி 720p HD, அல்லது 1080P HD என்பதனை சுட்டுக. இனி குறிப்பிட்ட வீடியோ கோப்பினை உச்ச தெளிவுத்திறனில் காணலாம். (இது ஒரு சில வீடியோ கோப்புக்களுகு பொருந்தாது)


YouTube தளத்தில் இயங்கும் ஒரு வீடியோ கோப்பினை தானாக மீள இயங்கச் செய்ய வேண்டுமா?

குறிப்பிட்ட இணைப்புக்கு முன் https://www.youtube.com என்பதனை நீக்கி விட்டுyoutuberepeater.com என்பதனை சேர்த்து Enter அலுத்துக இனி அது youtuberepeater.com எனும் தளத்துக்கு மாற்றப்பட்டு தானாகவே மீண்டும் மீண்டும் இயங்கும் (Auto Replay)

உதாரணத்திற்கு https://www.youtube.com/watch?v=xyzxyzxyz எனும் இணைப்பினைyoutuberepeater.com/watch?v=xyzxyzxyz என மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் infinitelooper எனும் தளமும் இந்த சேவையை தருகின்றது. இந்த தளமானது மேற்கூறிய தளத்தினை விட ஒரு படி மேல் சென்று தானாக மீள இயங்க வேண்டிய வீடியோ கோப்பின் கால வரையறையையும் தெரிவு செய்து கொள்ள வசதியை வழங்குகின்றது.

எனவே குறிப்பிட்ட வீடியோ கோப்பினை இந்த தளத்தின் மூலம் நீங்கள் பார்க்க உங்கள் வீடியோ கோப்பிற்கான இணைப்பை பின்வருமாறு மாற்றி அமைக்க வேண்டும்.
infinitelooper.com/watch?v=xyzxyzxyz


உங்கள் நாட்டில் இயங்குவதற்கு தடை செய்யப்பட ஒரு வீடியோ கோப்பினை இயங்கச் செய்ய வேண்டுமா?

குறிப்பிட்ட வீடியோ கோப்பில் உள்ள watch?v= என்பதனை /v/ ஆக மாற்றுக

உதாரணத்திற்கு உங்கள் வீடியோ கோப்பின் இணைப்பு https://www.youtube.com/watch?v=xyzxyzxyz எனின் அதனைhttps://www.youtube.com/v/xyzxyzxyz என்றவாறு மாற்றுக.

வீடியோ கோப்பொன்றினை பிறகொரு சந்தர்பத்தில் பார்க்க

YouTube தளத்தில் இருக்கும் ஒரு வீடியோ கோப்பினை நீங்கள் பிறகு ஒருசந்தர்பத்தில் பார்க்கலாம் என எண்ணினால் YouTube தளத்தில் வலது பக்கம் தரப்பட்டிருக்கும் Watch Later என்பதனை சுட்டுக. இனி குறிப்பிட்ட வீடியோ கோப்பினை பிறகு ஒருசந்தர்பத்தில் பார்க்கலாம். (இதற்கு Google தளத்தின் கணக்கொன்று அவசியம்.)


குறைந்த இணைய வேகத்திலும் சிறந்த அனுபவத்தினை பெற.

குறைந்த வேகத்தில் அமைந்த இணைய இணைப்பின் போதும் தங்கு தடையின்றி வீடியோ கோப்புக்களை இணையத்தில் பார்க்க Feather beta எனும் வசதியை YouTube தளம் தருகின்றது. குறிப்பிட்ட பக்கத்திற்குச் சென்று Join the “Fether” Beta என்பதனை அழுத்துவதன் மூலம் நீங்களும் இந்த வசதியை செயற்படுத்திக் கொள்ளலாம்.

இதோ அதற்கான பக்கம் ====> இங்கே சுட்டுக


குறிப்பிட்ட ஒரு சொல்லை அடிப்படையாக கொண்ட தேடல் முடிவுகளை பெற.

YouTube தளம் மூலம் நாம் வீடியோ கோப்புக்களை தேடுகையில் குறிப்பிட்ட ஒரு சொல் அடங்கிய அனைத்து வீடியோ கோப்புக்களையும் தேடல் முடிவில் பெறுவதற்கு allintitle: என்பதுடன் குறிப்பிட்ட சொல்லை இட்டு தேட வேண்டும்.

உதாரணத்திற்கு “தமிழ்” என்ற சொல் அமைந்த அனைத்து வீடியோ கோப்புக்களையும் தேடல் முடிவில் பெற வேண்டுமாயின் YouTube தளத்தின் Search Bar இல் allintitle:தமிழ் என தட்டச்சு செய்து தேடல் வேண்டும்.


YouTube தளம் மூலம் வீடியோ கோப்புக்களை Edit செய்வதற்கு.

நீங்கள் YouTube தளத்தில் வீடியோ கோப்புக்களை பதிவேற்றி பகிர்ந்து கொள்பவர்
எனின் உங்கள் வீடியோ கோப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்த (Edit
செய்வதற்கு) YouTube தளம் வசதியை தருகின்றது. குறிப்பிட்ட பக்கத்திற்குச்
செல்ல கீழுள்ள இணைப்பில் செல்க.

YouTube Editor ====> இங்கே சுட்டுக

YouTube தளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளை கண்டுகழிக்க

இவைகள் தவிர YouTube தளம் மூலம் தமிழ் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளில் அமைந்த முழுமையான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்சிகள் போன்றவற்றினையும் இலவசமாக பார்க்கலாம். இவற்றினை நீங்களும் பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

திரைப்படம் ====> இங்கே சுட்டுக.

தொலைக்காட்சி நிகழ்சிகள் =====> இங்கே சுட்டுக.

Tuesday, August 5, 2014

உலகின் முதலாவது வயர்லெஸ் ஸ்கானர் மவுஸ் உருவாக்கம்

ஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to Innovation (DTOI) நிறுவனம் உலகின் முதலாவது வயர்லெஸ் ஸ்கானர் மவுஸினை உருவாக்கியுள்ளது.
சாதாரண ஒப்டிக்கல் மவுஸ்களை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Zcan மவுஸ் ஆனது புகைப்படங்கள், டெக்ஸ்ட் ஆகியவற்றினை ஸ்கான் செய்யும் வசதியை பயனர்களுக்கு வழங்குகின்றது.
2.4 GHz மீடிறனில் Wi-Fi தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் Zcan மவுஸினை Windows 7, Windows 8, Mac OS X 10.6 ஆகியவற்றிலும் மூன்றாம் தலைமுறைக்குரிய iPad, இரண்டாம் தலைமுறைக்குரிய iPad Mini மற்றும் iPhone 5/5S ஆகியவற்றிலும் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் Excel, Word, PDF, TXT JPEG, TIFF, PNG அல்லது BMP கோப்புக்களை ஸ்கான் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




Tuesday, June 3, 2014

தெரிந்து கொள்வோம்: "Router Technology"


இணையத்தை இயக்குவதில் முக்கியப் பங்கு எப்போதும் Router யை மட்டுமே சேரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
தொழில்நுட்ப சுருக்கம்
இணையத்தை இயக்க தெரிந்த நமக்கு, இதன் செயல்பாடுகளை புரிந்து கொள்ள கடினமாகவே உள்ளது.
நமக்கு கிடைக்கும் இணையச் சேவையானது routing என்னும் முறையை பயன்படுத்தி ISP(Internet service provider) மூலமாக நம்மை வந்தடைகிறது.
இதன் வாயிலாக பெறப்படும் சேவை பல பயனாளிகளை சென்றடைவதற்காக switching என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது.
செயல்படும் விதம்
வேறு networkல் இருந்து ISP மூலமாக பெறப்படும் தகவல் packet என்னும் பெயரில் router யை வந்தடைகிறது. இந்த packet ல் தகவல் யாரிடம் இருந்து பெறப்பட்டது, யாரிடம் சென்று சேர வேண்டும் என்று தகவல்கள் துல்லியமாக குறிப்பிடப்பட்டிருக்கும். Router அந்த packet யை தனது வழியில் பாதுகாப்பு வழிமுறைகள் ஏதும் உள்ளதா என சோதனையிட்டு அனுமதிக்கும்.
பெறப்படும் மற்றும் சென்றடையும் தகவல்கள் அனைத்தும் protocols மூலமாக தனது செயல்முறையை தொடங்குகின்றன.
தகவல் பரிமாற்றத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு இவற்றில் பல வகைகள் உள்ளன. (eigrp,rip,ospf).
இதன் செயல்பாடுகள் அனைத்தும் ISO (International Organization for Standardization) வகுத்துள்ள அதன் கட்டுப்பாடான 7 layers முறைப்படியே நடைபெறுகிறது.இதன் தொழில்நுட்ப திறனில் பல நிறுவனங்கள் இருந்தாலும் cisco என்னும் நிறுவனம் தான் நீண்டகாலமாக நிலைத்து நின்று சிறந்து விளங்குகிறது.

Monday, May 12, 2014

வாட்ஸ்ஆப் மென்பொருளில் பேசும் வசதி அறிமுகம்; பேஸ்புக் அதிரடி அறிவிப்பு

மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாட்ஸ்ஆப்பின் அசுர வளர்ச்சியை கண்டு அதை பேஸ்புக் நிறுவனமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த சில மதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப்பில், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன. லைன், வைபர், டாங்கோ போன்ற மென்பொருள்களில் உள்ள பேசும் வசதி வாட்ஸ்ஆப்பில் இல்லை என்பது ஒரு குறையாவாக வாடிக்கையாளர் மத்தியில் நிலவியது. எனவே அந்த குறையை போக்கும் விதமாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.

Monday, June 3, 2013

அனைத்து சாதனைகளையும் முறியடித்த செம்சுங் கெலக்ஸி எஸ்4

செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போனானது உலகில் வேகமாக விற்பனையாகிய ஸ்மார்ட் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
அந்நிறுவனத்தின் அறிக்கையின் படி வெளியாகி 1 மாத காலப்பகுதியில் 10 மில்லியன் கெலக்ஸி எஸ் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன.



செம்சுங் கெலக்ஸி எஸ்4 வின் முன்னைய வெளியீடான எஸ் 3 இதே எண்ணிக்கையை எட்டுவதற்கு 50 நாட்கள் தேவைப்பட்டதாக செம்சுங் தெரிவிக்கின்றது.
மேலும் கடந்த வருடம் மே மாதம் வெளியாகிய எஸ் 3 வரை 60 மில்லியனுக்கும் அதிகம் விற்பனையாகியுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது.



My status