Thursday, March 29, 2012

Video Magic Pro: வீடியோக்களை எடிட் செய்வதற்கு


Video Magic Pro: வீடியோக்களை எடிட் செய்வதற்கு

வீடியோக்களை எடிட் செய்வதற்கு நிறைய மென்பொருள்கள் உள்ளன. இருப்பினும் Video Magic Pro என்ற மென்பொருள் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஓபனாகும் விண்டோவில் உங்களுக்கு தேவையான வீடியோவை தெரிவு செய்யவும்.
அதன் பின் Settings விண்டோ ஓபனாகும். இதில் உள்ள Profile என்பதை கிளிக் செய்ய நமக்கு தேவையான வீடியோ கோடக், ஆடியோ கோடக் மற்றும் ப்ரேம் ரேட் என விதவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும்.

இதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து கொண்டு ஓகே கிளிக் செய்ததும் Preview பார்க்கும் வசதியும் உள்ளது, இறுதியாக இதன் கீழே உள்ள Start பட்டனை கிளிக் செய்ய ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த மென்பொருளின் மூலம் வீடியோவினை எடிட் செய்ய, சேர்க்க, பிரிக்க, யூடியூபிலிருந்து பதிவிறக்கம் செய்ய, ரிங்டோனை உருவாக்க என பலவிதமான செயல்களை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

My status