Wednesday, April 25, 2012

குரல் மூலம் கடவுச்சொல்​லை ஏற்படுத்தக்​கூடிய USB driveகள் அறிமுகம்

கணணித் துறையில் தகவல்களை இடமாற்றாம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் USB driveகள் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றன.
எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச்சொற்களை கொடுப்பது வழமை.


இக்கடவுச்சொற்கள் இதுவரை காலமும் எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் காணப்பட்டன.
எனினும் தற்போது குரல் பதிவு மூலம் கடவுச்சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன்கூடிய USB driveகள் அறிமுகமாகின்றன.
தற்போது 8GB அளவுடைய கோப்புக்களை சேமிக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள USB driveகள் விண்டோஸ், அப்பிளின் மக் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.
இவை 50 அமெரிக்க டொலர்கள் பெறுமதி உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

My status