Wednesday, March 28, 2012

ஒரு செக்கனில் உங்களை கண்டறிய உதவும் மென்பொருள் (வீடியோ இணைப்பு)


 36 மில்லியன் முகங்களுக்குள் உங்கள் முகத்தை ஒரே செக்கனில் கண்டறியும் விசேட மென்பொருளைக் கொண்ட கருவி (system) உருவாக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் மென்பொருள் பொறியியளாளர்களால் உருவாக்கப்பட்ட இம்மென்பொருளைக் கொண்ட முறைமை பாதுகாப்புத்துறையில் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hitachi Kokusai என்ற இந்த முறைமை மூலம் உலகெங்கிலுமுள்ளவர்களின் முகங்களை உடனுக்கு உடன் ஸ்கானிங் முறையில் அவதானிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள கமெரா இடது, வலது பக்கங்களிலும் 30 டிகிரிக்குள் உள்ளவர்களை மட்டும் துல்லியமாக ஸ்கான் செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இம் முறைமையானது அடுத்த வருடம் முதல் விற்பனைக்கு வருகின்றது.

No comments:

Post a Comment

My status